சர்வதேச வடிவமைப்பாளர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் கட்டிடக் கலைக்கான டீஜீன் விருதுகளில் இடம் பெற்ற சில முக்கியமான கட்டிடங்களை பார்க்கலாம்.
கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக்கானமுக்கியமான வலை தளமாக டீஜீன் விளங்குகிறது. உலகின் தலைசிறந்த கட்டிடடக் கலை நிபுணர்கள் கொண்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் இவ்வலை தளத்தின் டீஜீன் விருதுகள் இத்துறை சார்ந்த வல்லுநர்களால் முக்கியமானதாக அங்கீகரிக்கப்படுகிறது. இந்தாண்டிற்கான டீஜீன் விருதுகளுக்கு 4500க்கும் மேற்பட்ட என்ட்ரீக்கள் 87 வெவ்வேறு நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 267 கட்டிடங்களை விருதுக்கான கடைசி கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர் தேர்வுக்குழுவினர்.
அவற்றிலிருந்து சில குறிப்பிடும்படியான கட்டிடங்களைப் பார்ப்போம்.
** நீருக்கடியில் உணவகம்**
ஐரோப்பாவில் உள்ள முதல் நீருக்கடியிலான உணவகமாக கருதப்படும் ‘அண்டர்’ ரெஸ்டாரண்ட் நார்வே நாட்டிலுள்ள பேலி எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. ஸ்னேஹெட்டாவால் வடிவமைக்கப்பட்ட இது 495 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட உணவகமாகும். உங்கள் முன்னால் உள்ள ஒரு பெரிய கண்ணாடியின் வழியாக கடல் வாழ்வைப் பார்த்தபடியே உணவை மென்மையாக ருசி பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?
அந்த அனுபவத்தை ‘அண்டர்’ ரெஸ்டாரண்ட் உங்களுக்கு வழங்குகின்றது. முழுக்க ஓக் மரத்தினால் இதன் இண்டீரியர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உணவகத்தில் ஒரு நடைமேடை, ஷாம்பெயின் பார், கீழ் தளத்தில் பிரதான உணவகம் என மூன்று நிலைகள் உள்ளன. ரெஸ்டாரெண்ட் மெனுவில் உள்ள கடல் உணவகங்கள் அக்கடலிலேயே பிடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்கிறார்கள். ‘அண்டர்’ அதன் கட்டிடக்கலைக்கும் மெனுவுக்கும் மட்டுமல்ல அதன் நோக்கத்திற்காகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கடலின் பல்லுயிர் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் நோக்கம் கொண்டது என இதன் வடிவைப்பாளர்களும், உரிமையாளரும் தெரிவிக்கின்றனர்.
**அலை போல வீடுகள்**
டென்மார்க்கிலுள்ள வெஜில் நகரத்திலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தான் இது. அலை போலவும், ரோலர் கோஸ்டர் போலவும் தோற்றமளிக்கும் ‘வேவ்’ எனப்படும் இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ஹென்னிங்க் லார்சன் எனும் கட்டிட நிபுணர்.
மொத்தம் 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் 100 குடியிருப்புகள் இந்த ‘வேவ்’வில் உள்ளன. ஒவ்வொரு கோபுரத்திலும் ஒன்பது தளங்கள் உள்ளன. பால்கனி, மரத்தாலான இண்டீரியர்கள்,வெளிச்சம் புகும் எளிமையான அறைகள் என வடிவமைத்திருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்டிடத்தை நிறைவு செய்ய 11ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இக்கட்டிடத்திற்குப் பின் அடுக்குமாடிக் குடியிருப்பின் வடிவமைப்பே மாறும் என தெரிவிக்கிறார்கள் கட்டிடக்கலை நிபுணர்கள்.
**சூறாவளியிலிருந்து காக்கும் அரண்**
2007, நவம்பர் 15ஆம் தேதி இரவில் பங்களாதேஷ் சூறாவளித் தாக்குதலால் சின்னாபின்னமானது. 15,000 பேர்களை காவு வாங்கிய அந்த கோர சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட காஷெஃப் சவுத்ரி என்ற கட்டிட நிபுணர் நேரடியாக பாதிப்படைந்த மக்களை புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தினார். அதன் பின் கட்டிட நிபுணராக சூறாவளியிலிருந்து காக்கும் வகையில் பாதுகாப்பு அரண் ஒன்றை கட்டியமைத்திருக்கிறார்.
உள்ளூர் கட்டிட நுட்பங்களும் பொருட்களும் இணைந்து, இயற்கையின் தீவிர காலநிலை நிலைமைகளையும் கணக்கில் கொண்டமைக்கப்பட்டது இந்த ‘சைக்ளோன் ஷெல்டர்’. நீரினால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் குவாகா பகுதியில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை பற்றி காஷெஃப் கூறும் போது, ‘சூறாவளியின் பேரழிவிலிருந்து இது முற்றிலுமாக காக்கும் எனக் கூற முடியாது. ஆனால் இங்கே எனது பணி என நான் நம்புவது, மனிதர்களை விலங்குகளை உயிர் இழப்பிலிருந்து காயத்திலிருந்து முடிந்தவரை காக்கவும், உயிரிழப்புகளைக் குறைப்பதுமே ஆகும்’ என்கிறார்.
காஷெஃப் சவுத்ரியின் கட்டிடங்கள் எளிமையுடன் சமூகத்திற்கு சேவை செய்யும் முன்மாதிரியாக இருக்கின்றன.
மேலும் முக்கியமான சில கட்டிடங்களின் புகைப்படங்கள்.
**காக்ஸ்க்ரூ ஹவுஸ், ஜெர்மனி**
**பப்பன் யார்ட் நெ.2, பப்பன், சீனா**
**வெசல், நியூ யார்க் நகரம், அமெரிக்கா**
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”