dகலைஞருக்கு கராத்தே சம்மேளனம் அஞ்சலி!

public

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு அகில இந்திய கராத்தே சம்மேளனம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 11 ஆம் தேதி டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய கராத்தே சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் கலைஞருக்காக, அஞ்சலி செலுத்தப்பட்டது. 3000 கராத்தே வீரர் வீராங்கனைகள் முன்னிலையில் கலைஞரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு, அவருக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய கராத்தே சங்கத் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், இந்திய கராத்தே சங்க பொதுச் செயலாளர் பரத் ஷர்மா, ராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பிரகாஷ் ததியா, டெல்லி ஒலிம்பிக் சங்கத் தலைவர் குல்தீப் வாட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக, இந்திய கராத்தே சங்கத் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,1974ஆம் ஆண்டு கலைஞரின் ஆட்சியில் தான் முதலாவதாக அகில இந்திய கராத்தே சம்மேளனம் துவங்கப்பட்டது. இந்த சம்மேளனம் உருவாவதற்கு உறுதுணையாகவும், தேவையான உதவிகளையும் செய்து கொடுத்தவர் கலைஞர். அதுபோன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கராத்தே பள்ளிகள் தொடங்குவதற்கும் உதவிகளை செய்துக் கொடுத்தவர் கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *