dகருணைக் கொலையைச் சாடும் கருப்பு துரை

Published On:

| By Balaji

இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ள கேடி என்கிற கருப்பு துரை திரைப்படம் லண்டனில் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும் ஆசிய திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வல்லமை தாராயோ படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான மதுமிதா கொலை கொலையா முந்திரிக்கா, மூணே மூணு வார்த்தை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கியுள்ள கருப்பு துரை திரைப்படம் தென் மாவட்டங்களில் பின்பற்றப்படும் கருணைக் கொலையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

வயதானவர்கள், குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் பராமரிக்க முடியாமல் ‘தலைக்கு ஊற்றுதல்’ என்ற முறையில் கருணைக் கொலை செய்கின்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க ஊற்றி அவர்கள் குடிப்பதற்கு இளநீர் தருவார்கள். இதனால் உடனடியாக அவர்கள் மரணத்தை தழுவார்கள்.

80 வயதான கருப்பு துரை என்ற கதாபாத்திரத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் ‘தலைக்கு ஊற்ற’ திட்டமிட அவர் அதை அறிந்து தப்பிவிடுவார். அப்போது கோயிலில் வளரும் 9 வயது அனாதைச் சிறுவனின் அறிமுகம் கருப்பு துரைக்கு கிடைக்கிறது. அந்த சிறுவன் இருத்தலுக்கும் வாழ்க்கையை வாழ்வதற்குமான வித்தியாசத்தை சொல்லாமல் சொல்கிறான். சோகமாக படத்தை தொடங்கினாலும் முழுக்க கொண்டாட்டமாகவே திரைக்கதையை நகர்த்தியுள்ளனர்.

மு.ராமசாமி கருப்பு துரை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்களை ஒத்திகை பார்த்து இறுதியில் நாக விஷால் என்ற சிறுவனை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. கேப்ரில்லா, படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share