Dகமலுடன் வேறுபடும் ஸ்ருதி

Published On:

| By Balaji

மத நம்பிக்கை குறித்து தனக்கும் அப்பாவுக்கும் வேறுபட்ட கருத்து இருப்பதாகக் கூறியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன் .

நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மார்ஷலாக நடிகர் கமல் ஹாசன் கௌரவிக்கப்பட்டார். அவருடன் நடிகை ஸ்ருதி ஹாசனும் நடிகை பூஜா குமாரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். இவர்களுடன் விழாவில் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸும் கலந்துகொண்டார். இந்த விழாவில் தேசப்பற்று பாடலை பாடினார் ஸ்ருதி.

இதனையடுத்து ஸ்ருதிஹாசன் போர்ப்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் சினிமாவில் அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகின்றன. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் விருப்பத்துடன் தேர்வு செய்து நடித்ததுதான். இதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பத்தாண்டு காலத் திரையுலக வாழ்க்கை நன்றாக இருக்கிறது. எதிர்காலத்திலும் பிடித்த கதாபாத்திரங்களிலும் கதைகளிலுமே நடிப்பேன்.

மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவுக்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை ஆன்மிக சக்தி இருப்பதாக நம்புகிறேன். அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு நேரடியான பதிலில்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன். அதே போல் திரைப்படத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

எனக்குத் திரைத் துறையில் கிடைக்க வேண்டிய மரியாதையும் மதிப்பும் கிடைக்கின்றன. தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் இந்திப் படத்தில் நடித்துவருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும். நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டதையும், அதில் தேசப்பற்றுப் பாடலைப் பாடியதையும் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் என இரண்டு நடிகைகளை அடுத்து ‘போர்ப்ஸ்’ எனப்படும் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் இதழுக்குப் பேட்டியளித்த மூன்றாவது இந்திய நடிகை என்ற பெருமையை நடிகை ஸ்ருதி ஹாசன் பெற்றுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share