ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அதற்கு வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 2016ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய மோடி அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து கூடுமானவரையில் மக்கள் ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அரசு ஊக்குவித்து வருகிறது. RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள்கூட சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏடிஎம்கள் வாயிலான ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைக்கும் நோக்கத்தில் அதற்கு வரி விதிக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுப்பவர்களுக்குக் குறிப்பிட்ட வரியை விதிக்க அரசு முடிவுசெய்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உயர்த்தவும், கருப்புப் பணத்தை ஒழிக்கவும் முடியும் எனக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிம்களில் பணம் எடுப்பதில் மற்றொரு திட்டம் ஒன்றையும் அரசு கொண்டுவரவுள்ளது. மிக அதிகமான தொகையை ஏடிஎம்களில் எடுக்கும் போது வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அடையாளத்தைப் பதிவிடும் விதிமுறை கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் தனிநபரின் வரி ரிட்டன்களைச் சரிபார்க்க வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜூலை 5ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் ஏடிஎம் பரிவர்த்தனை தொடர்பான இந்தத் திட்டத்தை அரசு ஆலோசித்துள்ளது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
**
மேலும் படிக்க
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
**
[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்](https://minnambalam.com/k/2019/06/09/49)
**
�,”