கனடா நாட்டைச் சேர்ந்த தமிழ் இலக்கியத் தோட்டம், எழுத்தாளர் இமையத்துக்கு வாழ்நாள் சாதனைக்காக 2018ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்கியுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் மருத்துவர் ஜானகிராமன், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கரீ ஆனந்தசங்கரீ, எழுத்தாளர் அ.முத்துலிங்கம், சிறப்பு விருந்தினராக கொலம்பியா பல்கலைக்கழக விரிவுரையாளர் டைலர் ரிச்சர்ட் ஆகியோர் கலந்துகொண்டனர். ‘நடுகல்’ நாவலுக்கான புனைவுப் பரிசு தீபச்செல்வனுக்கும், ‘காக்கா கொத்திய காயம்’ நூலுக்காக அபுனைவுப் பரிசு உமாஜிக்கும், ‘சிறிய எண்கள் தூங்கும் அறை’ தொகுப்புக்காக போகன் சங்கருக்குக் கவிதை நூலுக்கான பரிசும், ‘பீரங்கி பாடல்கள்’ நூலுக்காக இரா.முருகனுக்கு மொழிபெயர்ப்புப் பரிசும், Beyond the Sea நூலுக்காக பேராசிரியர் ரங்கசாமி கார்த்திகேசுவுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புப் பரிசும் வழங்கப்பட்டன.
ராமசாமி துரைபாண்டிக்கு சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருதும், செல்வி கல்யாணி ராதாகிருஷ்ணனுக்கு மாணவர் கட்டுரைப் போட்டி பரிசும், எஸ்.திருச்செல்வம், ம.நவீன் ஆகியோருக்கு தமிழ் இலக்கிய சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் இமையம், “நான் எழுதியுள்ள ஐந்து நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நெடுங்கதையும் என்னுடைய அறிவின் பலத்தால், சிந்தனையின், கற்பனையின், மதி நுட்பத்தின் பலத்தால் எழுதப்பட்டவை அல்ல. எழுத்தாளனாகியே தீர வேண்டும் என்ற வேட்கையினாலோ, எழுத்தாளனாகிவிட்டதால் தொடர்ந்து எழுதித்தான் தீர வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ எழுதப்பட்டதல்ல. நடைமுறை சமூகத்தின் நிஜ வாழ்க்கை என்ற கந்தக நெருப்புத்தான் என்னை எழுதத் தூண்டியது; இப்போதும் எழுதத் தூண்டிக்கொண்டிருக்கிறது.
நான் வாழ்கிற நிகழ்கால சமூகத்தை என்னுடைய சொந்த கண்களாலேயே விருப்பு வெறுப்பின்றி பார்க்கிறேன். மார்க்சிய, பெண்ணிய, தலித்திய, நவீனத்துவ, பின்நவீனத்துவ, இருத்தலியல், சர்ரியலிசம் என்பன போன்ற எந்தக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டும் இதுவரை நான் சமூகத்தைப் பார்த்ததில்லை. இனியும் அவ்வாறு பார்க்கப் போவதில்லை. இலக்கியத்தில் சார்பு நிலையைவிட முக்கியமானது நடுநிலைமை. நான் வாழும் சமூகத்தை, உலகத்தை மேலும் மேலும் புரிந்துக்கொள்வதற்கு என்னுடைய எழுத்துகள் உதவுகின்றன. நான் எழுத்தை, இலக்கியத்தை கலாச்சார செயல்பாடாகவே கருதுகிறேன். படைப்பின் தரம், வலிமை என்பது அதன் உண்மைத் தன்மையில் இருக்கிறதே தவிர படைப்பைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையில் இல்லை” என்று கூறினார்.
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)
**
**
[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)
**
**
[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”