Dஉலகின் முதல் 5ஜி மாவட்டம்!

Published On:

| By Balaji

?5ஜி நெட்வொர்க் சேவையை முதன்முதலாக யார் அறிமுகப்படுத்துவது என அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் போட்டி போட்டு வந்தன. அந்த வகையில் மற்ற நாடுகளுக்கு முன்பாகவே 5ஜியை அறிமுகப்படுத்திவிட வேண்டும் என சீனா மும்முரமாகச் செயல்பட்டது.

இந்த நிலையில், உலகிலேயே முதல் 5ஜி சேவை பெற்ற மாவட்டமாக சீனாவின் ஷாங்காய் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் 4ஜி நெட்வொர்க்குகளின் தரவிறக்க வேகத்தைவிட 5ஜி சேவையில் 10 முதல் 100 மடங்கு வரை அதிக வேகத்தில் தரவிறக்கம் செய்ய முடியும்.

உலகிலேயே முதன்முதலாக 5ஜி நெட்வொர்க்கையும், பிராட்பேண்ட் சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக ஷாங்காய் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சீன அரசுக்குச் சொந்தமான ‘சைனா மொபைல்’ நிறுவனம் ஷாங்காயில் 5ஜி நெட்வொர்க்கை சோதித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்தப் பகுதியில் 5ஜி பேஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

5ஜி சேவை தொடக்க விழாவில் ஷாங்காய் துணை மேயர் வு கிங் 5ஜி நெட்வொர்க் வாயிலாக வீடியோ அழைப்பு மேற்கொண்டார். திபெத் உட்பட சீனாவின் பல பகுதிகளில் 5ஜி நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share