dஇப்படியும் வழி உண்டு அலுவலகத்திற்கு!

public

பொதுவாக பெருநகரங்களில் அலுவலக பணிக்கு செல்லும் பெரும்பாலானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் சரியான நேரத்திற்கு அவர்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமலும் தங்களின் பணியை முடிக்கமுடியாமலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இது போன்ற மன அழுத்தத்தை தடுக்கும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் புதுவிதமான போக்குவரத்து நெரிசல் இல்லாத வழியில் பயணம் செய்து அசத்தி வருகிறார்.

ஜெர்மனியின் முனிச் நகரை சேர்ந்தவர் பெஞ்சமின் டேவிட். இவர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் முனிச் நகரின் சாலையை ஒட்டியுள்ள ‘இசார்’ என்ற ஆற்றில் தினமும் சுமார் 2கி.மீ தூரம் நீந்தி அலுவலகத்திற்கு செல்கிறார். தினமும் இரண்டு மணி நேரம் இந்த ஆற்றில் நீந்துகிறார். ஆற்றில் நீந்தும் போது தனது பேண்ட், சட்டை, மேல்கோட்டு, மற்றும் ‘ஷு’க்களை கழற்றி தண்ணீர் புகாத (வாட்டர் புரூப்) பைக்குள் வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் மடிக்கணினி போன்ற சாதனங்களையும் தனது பேக்கில் வைத்து முதுகில் சுமந்தபடி ஆற்றில் நீந்தி அலுவலகத்திற்கு செல்கிறார். அவர் நீந்தும் வழியில் பல பாலங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து பாலங்களையும் கடந்து பெஞ்சமின் டேவிட் அலுவலகத்திற்கு செல்கிறார்.

அங்கு அவரை பார்க்கும் சிலர், கேலி-கிண்டல் செய்து சிரிக்கின்றனர். ஆனாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

‘ஆற்றில் நான் நீந்திச் செல்வதால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கிறேன். இதனால் மன அழுத்தம் எதுவும் இல்லை. வழக்கத்தை விட மிக சீக்கிரமாக அலுவலகம் செல்ல முடிகிறது’ இதனால் எனக்கு கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்க முடிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *