சியோமி நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன் ஒன்று முதன்முறையாக இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது.
விலை குறைவாகவும், விலைக்கேற்ற தரத்துடனும் செல்போன்களை வெளியிட்டு வருகிறது சியோமி. அந்த வகையில் தீபாவளிக்கு இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட Redmi Note 6 Pro மாடல் செல்போனை இன்று முதல் முதன்முறையாக விற்பனைக்குக் களமிறக்கியுள்ளது சியோமி.
MIUI 10,8.1 ஓரியோ இயங்குதளம், 6.26 இன்ச் திரை,Qualcomm Snapdragon 636 SoC, 4GB/ 6GB ரேம்கள் என வெளியாகியுள்ள இந்த மாடல் ஃப்ளிப்கார்ட், Mi.com, மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் இன்று 12 மணி முதல் கிடைக்கும்.
4GB RAM மாடல் ரூ.13,999க்கும் 6GB ரேம் மாடல் ரூ.15,999க்கும் கிடைக்கிறது. முதல் நாள் விற்பனையான இன்று மட்டும் ரூ.1000 தள்ளுபடி விலையில் இவை கிடைக்கின்றன.
ஆன்லைனில் செல்போன் விற்கவே கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியா வந்தது சியோமி. ஆனால் இந்தியாவில் மலிவு விலை செல்போனுக்கு இருக்கும் தேவையை அறிந்த சியோமி ஆன்லைன் மட்டுமல்லாது பல ஆஃப்லைன் ஸ்டோர்களையும் திறந்தது. செல்போன்களுடன் நிறுத்திக்கொள்ளாமல் டிவி உள்ளிட்ட இன்னபிற பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது.
அக்டோபர் 29ஆம் தேதி மட்டும் 500 ஆஃப் லைன் ஸ்டோர்களைத் திறந்த சியோமி 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 5000 ஸ்டோர்களைத் திறக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.�,