அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் நடிகை ரெஜினா.
கடல் படம் வாயிலாக சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் அரவிந்த் சாமி தொடர்ச்சியாக பல படங்களில் தற்போது நடித்துவருகிறார். செக்க சிவந்த வானம், நரகாசூரன் என பிஸியாக இருந்துவரும் அவர் தற்போது இன்னொரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தை அச்சமின்றி, என்னமோ நடக்குது போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராஜபாண்டி இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்திற்கான கதாநாயகியாகத் தேர்வாகியுள்ளார் ரெஜினா. இதுவரை ரெஜினா நடித்திராத கதாபாத்திரம் இந்தப் படத்தில் அவருக்குக் கொடுக்கப்படவுள்ளது. இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. பெரும்பாலான காட்சிகள் ஏவிஎம்மில் எடுக்கப்படவுள்ளன. இப்படத்துக்கு இசையமைக்க நிவாஸ் பிரசன்னாவிடம் படக்குழு பேசிவருகிறது. ரெஜினா தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை,பார்ட்டி ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.�,