சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து, கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் வளாகத்தில் 6 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றுள்ளது. அந்தக் கட்டிடத்தின்மீது, இன்று (ஆகஸ்ட் 22) காலையில் ஏறிய கல்லூரி மாணவர், மாடியில் இருந்து கார் பார்க்கிங் பகுதியில் குதித்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இளைஞர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த சேதன் குமார்(வயது 20) என்பவர் தற்கொலை செய்துகொண்டதும், இந்த மாணவர் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மாணவரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.�,