Dஅனுஷ்கா இல்லாத அருந்ததி 2?

Published On:

| By Balaji

அனுஷ்காவின் வெற்றிப் படமான அருந்ததி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் அருந்ததி. இப்படத்தை மறைந்த கொடி ராமகிருஷ்ணா இயக்கியிருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற படம் இது. தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இதே பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அனுஷ்காவுடன் சோனு சூத், சாயாஜி சிண்டே ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் அந்தாண்டிற்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் அருந்ததிக்காக பெற்றார் அனுஷ்கா ஷெட்டி.

இந்த நிலையில், அருந்ததி 2 படத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். இப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்களித்த அனுஷ்காவை அனுகியுள்ளது படக்குழு. இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் தேவைப்படும் நிலையில், அனுஷ்கா இப்படத்தின் ஒப்பந்தத்தை மறுத்துள்ளார். அதனால் அனுஷ்காவிற்கு பதிலாக பாயல் ரஜ்புட் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான RX100 படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் பாயல்.

முதல் பாகத்தின் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா மறைந்த நிலையில், முன்னணி இயக்குநர் ஒருவர் இப்படத்தை இயக்கவுள்ளார். முதல் பாகத்தை தலைப்பை மட்டுமே எடுத்துள்ள படக்குழு, கதையை முற்றிலும் மாற்றியுள்ளது. மேலும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ஹாலிவுட் கலைஞர்களையும் அனுகவுள்ளதாம் அருந்ததி 2 படக்குழு.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share