dஅந்நிய முதலீடுகளை ஈர்க்கும் இந்தியா!

Published On:

| By Balaji

2018ஆம் ஆண்டில் இந்தியா 42 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

’வர்த்தகம் மற்றும் மேம்பாடுகளுக்கான உலக முதலீட்டு அறிக்கை 2019’ ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் 3.5 சதவிகித உயர்வுடன் 54 பில்லியன் டாலராக உள்ளது. இதில் 77 சதவிகித முதலீடுகளை இந்தியா மட்டுமே ஈர்த்துள்ளது. அதாவது 2018ஆம் ஆண்டில் இந்தியா 42 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது 6 சதவிகித வளர்ச்சியாகும்.

இந்தியாவில் நிறுவனங்களுக்கான இணைவு மற்றும் கையகப்படுத்துதல் மதிப்பு 23 பில்லியன் டாலரிலிருந்து 33 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆன்லைன் மின்னணு வர்த்தகத் துறையில்தான் இணைவு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கை அதிகமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய இ-காமெர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டை அமெரிக்காவின் வால்மார்ட் கைப்பற்றியது இதில் அடக்கம்.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவைத் தொடர்ந்து வங்கதேசம் 3.6 பில்லியன் டாலர் முதலீடுகளையும், இலங்கை 1.6 பில்லியன் டாலர் முதலீடுகளையும், பாகிஸ்தான் 2.4 பில்லியன் டாலர் முதலீடுகளையும் ஈர்த்துள்ளன.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share