Dஅஜித்-சிவா பட ரிலீஸ் தேதி!

public

அஜித்- சிவா காம்பினேஷனில் உருவான படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் இயக்குநர் சிவா காம்பினேஷனில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் விவேகம். தமிழில் கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் கன்னடத்தில் கமாண்டோ எனும் பெயரில் தற்போது டப் செய்யப்பட்டுவருகிறது. தமிழில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதனை மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த நிலையில் கன்னடத்தில் ‘ஹரிவு கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.

சமீபத்தில், கன்னட வெர்ஷனின் டீசர் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டு கவனம்பெற்றிருந்தன. இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அஜித்தின் படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கனெவே ‘என்னை அறிந்தால்’ ‘ஆரம்பம்’ போன்ற படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

விவேகம் படத்தின் ஆடியோவில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் சோனி மியூஸிக் இந்தியா யூ டியூப்பில் நேற்று (ஆகஸ்ட் 20) வெளியிட்டுள்ள காமாண்டோவின் பாடல்கள் அடங்கிய பட்டியலில் 5 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *