ீர்ச்சத்து அதிகம் நிரம்பிய தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்கள் கோடைக்கு உகந்தவை. வெள்ளரிக்காயுடன் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சேர்த்து செய்யப்படும் இந்த வெள்ளரிக்காய் லெமனேட், உடனடி புத்துணர்ச்சி தரும். அனைவருக்கும் ஏற்ற இந்த பானத்தை அவ்வப்போது அருந்தலாம். சம்மருக்கு மிகச் சிறந்த விருந்து இது.
**என்ன தேவை? **
சிறிய வெள்ளரிக்காய் – 2
எலுமிச்சை பழச்சாறு – 3 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை பழத்தோல் துருவல் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை/தேன் – முக்கால் கப்
உப்பு – 3 அல்லது 4 டீஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – சிறிதளவு
**எப்படிச் செய்வது? **
வெள்ளரிக்காயைக் கழுவி, தோல் சீவி, பெரிய ஸ்லைஸ் ஒன்றை வெட்டித் தனியே வைக்கவும் (அலங்கரிக்க). மீதியைத் துருவி சர்க்கரை சேர்த்து அரைத்து, வடிகட்டவும். இதனுடன், மீதி இருக்கும் தண்ணீரைச் சேர்த்து, ஐஸ் கட்டி, எலுமிச்சம்பழத் தோல் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உயரமான கிளாஸில் ஊற்றி, வெள்ளரிக்காய் ஸ்லைஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
**[நேற்றைய ரெசிப்பி: சப்ஜா விதை ரோஸ் மில்க்!](https://www.minnambalam.com/public/2022/03/11/1/sabja-rosemilk)**
.