hவன்முறை கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்

Published On:

| By Balaji

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த விளம்பரங்களுக்குத் தடை விதிக்கக் கோரி திமுக சார்பிலும், விளம்பரத்துக்கான தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது, இந்த விளம்பரங்கள் கடந்த 18ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டதாகவும், மேற்கொண்டு விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தமிழக அரசின் தரப்பில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜனவரி 21ஆம் தேதி திமுக அளித்த மனுவைப் பரிசீலித்து தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share