fதூய்மை பணியாளர்களுக்கு ரூ.2500 நிவாரணம்!

Published On:

| By Balaji

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் அயராது களப் பணி ஆற்றி வருகின்றனர். இந்த சூழலில், அவர்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 31) வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றிவரும் சுமார் 33,000 நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் சேவையை மனதார பாராட்டுகிறேன். அவர்களின் இந்த அரிய சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதவிர, சென்னை மாநகராட்சி பகுதியில் நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுவர். சென்னை மாநகராட்சி முகாமிலிருந்து வீடு திரும்பும் போது தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share