கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் குணமடைந்தார். கொரோனா இல்லாத மாநிலமாகத் தமிழகம் உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்த நிலையில் இன்று (மார்ச் 12) மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 124 நாடுகளைப் பாதித்துள்ளது. வேகமாகப் பரவி வரும் இந்த வைரசால் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மத்திய மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன. இதுமட்டுமின்றி கொரோனா பாதித்த நாடுகளுக்கு விசா மறுப்பு, விமானங்கள் ரத்து, பள்ளிகளுக்கு விடுமுறை, சுற்றுலாத் தலங்கள் மூடல் என பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்திருப்பதாக மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 12) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகபட்சமாகக் கேரளாவில் 17 பேர், மகாராஷ்டிராவில் 11 பேர், உத்தரப் பிரதேசத்தில் 10 பேர், டெல்லியில் 6 பேர், கர்நாடகாவில் 4 பேர், லடாக்கில் 3 பேர், தமிழகத்தில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 17 பேர் என இந்தியா முழுவதும் 73 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்த 10,57,506 பேருக்கு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக +91-11-23978046 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
**கவிபிரியா**
�,”