iகொரோனா: எந்த வயதினருக்கு அதிக பாதிப்பு?

Published On:

| By Balaji

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேர் 31-ல் இருந்து 40 வயதுக்கு உள்ளானவர்கள் என்ற புதிய தகவல் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசின் தகவல்களின்படி 97 ஆயிரத்து 407 கொரோனா பாதிப்படைந்தவர்களில் 19,423 பேர் அல்லது 20.04 சதவிகிதத்தினர், 31 லிருந்து 40 வயதுக்கு உள்ளானவர்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் 1,01,146 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 3817 பேர் சனிக்கிழமை காலை கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கையில் 97 ஆயிரத்து 407 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எடுக்கப்பட்டதாகும்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அடுத்த பிரிவினராக 41 இருந்து ஐம்பது வயது வரை உள்ளவர்கள் உள்ளனர். மொத்த நோயாளிகளில் 18.04 சதவிகிதம் பேர் இந்த வயதுடையவர்கள்.

கொரோனாவால் எளிதாக பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள் தான் என்ற சொல்லை பொய்யாக்கும் விதத்தில் வெறும் 10 சதவிகிதத்தினர் மட்டுமே 61 வயதில் இருந்து 70 வயது வரை உள்ள வயதுடையோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 லிருந்து 80 வயதுவரை உள்ளவர்களில் 4.34 சதவிகிதத்தினர் அதாவது 4 ஆயிரத்து 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 3.31 சதவிகிதத்தினர் அல்லது 3 ஆயிரத்து 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 வயதிலிருந்து 20 வயது உடைய பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 6.43 சதவீதத்தினர் அதாவது 6 ஆயிரத்து 262 பேர் உள்ளனர்.

பாலின ரீதியாக கணக்கெடுப்பின்படி பார்க்கும் போது ஆண்களே பெண்களை விட அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 60 ஆயிரத்து 596 ஆண்கள் அதாவது 62 சதவிகித ஆண்களும் 37 ஆயிரத்து 39 பெண்கள் அதாவது 38 சதவிகித பெண்களும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளார்கள். இந்த தகவல்களின்படி மகாராஷ்டிர மாநிலத்தின் இறப்பு சதவிகிதம் 3.68 ஆக உள்ளது.

** – பவித்ரா குமரேசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share