அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மீண்டும் பராமரிப்பு மையங்கள்!

Published On:

| By Balaji

தமிழகம் முழுவதும் கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்படி இந்தியாவில் மராட்டியம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று கணிசமான அளவில் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

இதனிடையே பொதுமக்கள், கொரோனா குறித்து பயமில்லாமல் முகக்கவசங்களை அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படுவதாகவும், இன்னும் சில நாட்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அந்தந்த மாவட்ட, மாநகர நிர்வாகங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக மாவட்டத்துக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் மையங்களைத் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தப் பராமரிப்பு மையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

**- ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share