xகொரோனா பாதிப்பு: நான்காவது இடத்தில் இந்தியா!

Published On:

| By Balaji

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 18 நாட்களில் பத்தாவது இடத்தில் இருந்து தற்போது நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 2,93,754 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் இங்கிலாந்து 2,91,588 தொற்று நோயாளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.

மே 24 அன்று இந்தியா பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தது. கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து தற்போது நான்காவது இடத்தை அடைய 18 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது.

ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 10 நாட்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் 9,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share