அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

public

தற்போது , கொரோனா தொற்று பரவல் குடிசைப் பகுதிகளில் குறைவாகவும், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் அதிகமாகவும் இருக்கிறது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்தில் குறைந்து இருந்த கொரோனா பரவல், மார்ச் மாத தொடக்கத்திலிருந்து பரவல் அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 2 ஆயிரம் வரை பாதிப்பு ஏற்படுகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(மார்ச் 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறை குடிசை பகுதிகளில் நோய் பரவல் குறைவாகவும், குடியிருப்பு பகுதிகளில் அதிகமாகவும் இருக்கிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகளின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து சுகாதார மையங்களிலும் இரவு 10 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா பாதிப்புள்ளவர்கள் தற்போது சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர். அவர்கள் மூலம் தொற்று அதிகமாக பரவுகிறது. மேலும், மதம், கலாச்சார, அரசியல் கூட்டங்களால் இன்னும் பரவல் அதிகரிக்கிறது. 18 வயது முதல் 45 வயது வரையிலானவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

தஞ்சையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று அதிகமாகவே இருக்கிறது. பாதிப்பு அதிகரிக்கும் மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்கும் வேலையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றால், அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இப்போதைக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை. அதனால், தமிழகத்தில் ஊரடங்கு வரும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம்.

கொரோனா உருமாற்றம் அடைவதால், தடுப்பூசி எடுத்து கொண்டாலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.81 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பதால் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

**வினிதா**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *