இன்று நாடு முழுக்க அனைத்து விளக்குகளையும் அணைக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் அகல் விளக்கின் விற்பனை அமோகமாக நடக்கிறது
உலக அளவில் தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு (ஏப்ரல் 3) பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஒன்பது நிமிடங்கள் டார்ச், அகல்விளக்கு அல்லது செல்போன் ஒளியை ஒளிரவிட சொன்னார்.
இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் அகல் விளக்கின் விற்பனை அமோகமாக நடக்கிறது. நேற்று (ஏப்ரல் 4) பகல் இரண்டு மணி அளவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு, இன்று (ஏப்ரல் 5) காலை கடைகள் திறக்கப்பட்ட சாதாரண கடைகளில்கூட இந்த அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகளின் விற்பனை விறுவிறுப்பாக நடந்து முடிந்தன.
**ராஜ்**�,