அனைவருக்கும் ஏற்ற இந்த சோளக் கஞ்சியில் உள்ள சத்துகள் உடலை கவசம் போல் காக்கும். இதில் நார்ச்சத்து அதிகம். இது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். காலை வேளையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குக் கொடுத்தால் நாள் முழுக்க சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.
**என்ன தேவை?**
நாட்டு வெள்ளைச்சோளம் – ஒரு கப்
சீரகம் – கால் டீஸ்பூன்
மோர் – 200 மில்லி
உப்பு – தேவையானவை
**எப்படிச் செய்வது?**
வெள்ளைச்சோளத்தை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, நன்கு அரைத்து லேசாகப் புளிக்கவிட்டு எடுத்தால், கஞ்சி தயாரிப்பதற்குத் தேவையான மாவு தயார். ஒரு கப் மாவுக்கு ஏழு முதல் எட்டு கப் தண்ணீர்விட்டு, சீரகம் சேர்த்து நன்கு வேகும் வரை காய்ச்சி, அதில் உப்பு சேர்த்து சிறிது ஆறியதும் அதில் மோர் கலந்து குடிக்கலாம். இதற்குத் துணையாக வல்லாரைத் துவையல் தொட்டுக்கொள்ளலாம்.
.