மிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி போன்ற சிறப்பு தினங்களையொட்டி நான்கு நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் சொந்த ஊர் செல்ல பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமான ரயில்கள் மட்டுமின்றி சிறப்பு ரயில்களும் நிரம்பியதால் மக்கள் அரசு பஸ்களை நாடிச் சென்றனர். தொடர் விடுமுறை கூட்டத்தை சமாளிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
வெயிலின் தாக்கம் காரணமாக மதியம் வரை கோயம்பேடு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மாலை 4 மணிக்குப் பிறகு பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்தனர். இரவு 7, 8 மணிக்கெல்லாம் பஸ் நிலையம் நிரம்பி காணப்பட்டது. கூட்டம் வர வர அவர்களை சிறப்பு பஸ்கள் மூலம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிரம்பின.
இந்த பஸ்கள் மூலம் சென்னையில் இருந்து 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 3,000 பஸ்கள் இயக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 700க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. கூட்டத்தைப் பார்த்து கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்பவும் 17ஆம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, ஆரணி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
.
தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் பயணம்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel