nபிரகாஷ் ராஜுக்கு எதிராக போலீசில் புகார்!

Published On:

| By Balaji

ராம்லீலா நிகழ்வு குறித்து பேசியது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் விவாதத்தில் அண்மையில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ‘ராம்லீலா’ நிகழ்வு குறித்து கடுமையாக விமர்சித்தார். அந்த நிகழ்வை குழந்தை ஆபாசத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். மேலும், ராம்லீலா நிகழ்ச்சியானது சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை பரப்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பான வீடியோ சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது. பிரகாஷ் ராஜுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “நான் எந்த மதத்துக்கும் எதிரானவன் அல்ல. மதத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்குத்தான் நான் எதிரானவன். நான் இந்து மதத்துக்கு எதிரானவன் என்ற போலிச் செய்தியை எத்தனை காலத்துக்கு நீங்கள் பரப்புவீர்கள். மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் கலாச்சாரத்தையும் எவ்வளவு காலம்தான் தவறாக பயன்படுத்துவீர்கள்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் ராம்லீலா விவகாரம் தொடர்பாக பிரகாஷ் ராஜ் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் பேசியதாக பிரகாஷ் ராஜ் மீது தில்லி திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share