வகுப்புகளைப் புறக்கணித்த கல்லூரி மாணவர்கள்!

public

தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் அரசு கலைக்கல்லூரி புவி அமைப்பியல் துறை சார்பில் மாணவர்களை களப்பயணத்துக்கு அழைத்து செல்லும் பணத்துக்குத் துறைத்தலைவர் கணக்கு காட்டுவதில்லை என்றும், மாணவர்கள் பணத்தை ஊழல் செய்துள்ளதாகவும், மாணவர்களிடம் அவர் கடுமையாக நடந்து கொள்வதாகவும், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புவி அமைப்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரிக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் துறைத்தலைவர்மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டதையடுத்து மாணவ மாணவிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் தனித்தனியாக கல்லூரி முதல்வரிடம் நேரடியாகவே புகார் அளித்துள்ளனர். ஆனாலும் துறைத்தலைவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தமிழக முதலமைச்சர் முதன்மை செயலாளர், உயர்கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பிவைத்து நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.