கிச்சன் கீர்த்தனா: மாப்பிள்ளை சம்பா தேங்காய்ப்பால் அல்வா

Published On:

| By Balaji

தீபாவளி ஸ்பெஷலாக எத்தனையோ இனிப்பு, பலகார வகைகள் இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட சிலவற்றின் மீது அலாதி பிரியம் உண்டு. தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பாரம்பர்ய பட்சணங்கள், சத்துமிக்க சிறுதானியங்களில் செய்யப்படும் பலகாரங்கள் இந்த தீபாவளியைக் கோலாகலமாக்கும். அவற்றில் இந்த மாப்பிள்ளை சம்பா தேங்காய்ப்பால் அல்வாவும் ஒன்று.

**என்ன தேவை?**

மாப்பிள்ளை சம்பா புழுங்கரிசி – ஒரு கப்

தேங்காய்ப்பால் – இரண்டே கால் கப்

நாட்டுச்சர்க்கரை – ஒன்றே கால் கப்

ஜாதிக்காய்த்தூள், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் – சிறிதளவு

மெலிதாக சீவிய பாதாம்பருப்பு, குங்குமப்பூ- சிறிதளவு

நெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

மாப்பிள்ளை சம்பா அரிசியை சூடான வாணலியில் சேர்த்து நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, சலித்துக்கொள்ளவும். அத்துடன், அரைத்த தேங்காய்ப்பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் ஊற்றிக்கிளறவும். ஓரளவு கெட்டிப்படும்போது மசாலாத் தூள்கள், நெய்விட்டுக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் நெய்யில் வறுத்த பாதாம், சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து எடுக்கவும்.

**[நேற்றைய ரெசிப்பி: சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி](https://minnambalam.com/public/2021/10/25/1/sweet-potato-poli)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share