தமிழகத்தின் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளில், அதன் உறுப்பினர்கள், உறுப்பினர்களுடன் வரும் விருந்தினர்களும் வெளியிலிருந்து மதுபானங்களை கொண்டு வரக்கூடாது என்று 2010 ஆம் ஆண்டு போடப்பட்ட தடையை கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இதுபற்றி இன்று (அக்டோபர் 2) மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியின் மதியப் பதிப்பில், [கிளப் மது: அரசு உத்தரவு நீக்கம்](https://minnambalam.com/k/2019/10/02/94/liquor-in%20clubs-highcourt-judgement) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சென்னை மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் 23- 3- 2010 அன்று வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையின் படி கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அவர்களோடு விருந்தினராக செல்பவர்கள் வெளியிலிருந்து எவ்வித மது பானங்களையும் கிளப்புகள் கொண்டுவந்து அருந்தக்கூடாது இன்று தமிழ்நாடு மதுபான உரிமம் சட்டம் 1981 பிரிவு 34 (2) இன் கீழ் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழகம் முழுதும் உள்ள கிளப்புகளில் வெளியே இருந்து மதுபானம் எடுத்து வந்த குடிக்கத் தடை விதிருக்கும் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ்.
தடையை நீக்கியது மட்டுமல்லாமல், கிளப் உறுப்பினர்கள் வெளியில் இருந்து எந்தெந்த வகை மதுவை எவ்வளவு கொண்டு செல்லலாம் என்றும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவகைகள் 4.5 லிட்டரும், வெளிநாட்டு மது வகைகளை 4.5 லிட்டரும், பீர் வகை என்றால் 7.8 லிட்டரும், ஒயின் வகைகளில் 9 லிட்டரும் கிளப்புக்குள் உறுப்பினர்கள் வெளியில் இருந்து எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார் நீதிபதி.�,