கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் இன்று (மார்ச் 19) ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகளையும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி ஒத்திவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலியாக பல்வேறு அலுவல் நடவடிக்கைகளும் உலக அளவில் முடங்கியுள்ளன. இந்நிலையில் தான் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொதுத் தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று ஐசிஎஸ்இ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
Indian School Certificate Examinations வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, மார்ச் 19 முதல் 31ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த ICSE, ISC பாடத்திட்ட மாணவர்களுக்கான 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா எதிரொலியாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICSE board class 10, 12 exams postponed till March 31#COVID2019india #coronavirusindia pic.twitter.com/mBfcvAXHjn
— editorji (@editorji) March 19, 2020
தமிழக பாடத் திட்டத்தில் நடைபெற்று வரும் தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் அரசுக்குக் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், உத்தரப் பிரதேசத்தைப் போல் தமிழகத்திலும் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி கொடுக்க வேண்டும். சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது போன்று தமிழகத்திலும் 12, 11, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 9ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பது குறித்தும், பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது குறித்தும் பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
**கவிபிரியா**�,”