Kட்ரம்ப் உதவி வேண்டாம் : சீனா!

Published On:

| By Balaji

இந்தியா சீனா எல்லைப் பகுதியில் அதிகரித்திருக்கும் பதற்றத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் பேசத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்ததை சீன அரசு நிராகரித்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளும் தகுதி கொண்டவை என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் எல்லைப்பகுதியில் ராணுவத்தை தொடர்ந்து குவித்து வருகிறது. இதை தொடர்ந்து இந்தியா சீனா எல்லைப் பகுதிக்கு இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் பேசுவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

ட்ரம்பின் இந்த கருத்துக்கு யாரும் இதுவரை எந்த பதிலும் அளித்திடாத நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன், இரண்டு நாடுகளுக்கும் உள்ள பிரச்சனைக்கு இடையே மூன்றாவது நபர் தலையிடுவதை இரண்டு நாடுகளுமே விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் எல்லை தொடர்பான பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு வழிமுறைகளும் பேச்சுவார்த்தைக்கான நடைமுறைகளும் உள்ளன. எங்களால் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகளின் மூலம் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும். எங்களுக்கு மூன்றாவது நபரின் தலையீடு தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

எல்ஏசி அல்லது லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் என்றழைக்கப்படும் சீன கட்டுப்பாட்டிலுள்ள பகுதி மற்றும் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள பகுதி இடையேயான எல்லை பகுதியின் பெரும்பாலான இடங்களில் சீன ராணுவமும் இந்திய ராணுவமும் படை பலத்தை அதிகரித்து வருகிறது. 1488 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த எல்லையில் பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்திய வீரர்கள் படை நுழைந்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது இதைத்தொடர்ந்து வெளியுறவு அமைச்சகம் இந்திய வீரர்களால் செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் இந்திய கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே நடந்தன. எல்லை மேலாண்மையில் இந்தியா எப்போதும் பொறுப்பான விதத்தில் நடந்து கொண்டு வருவதாக கூறி உள்ளது

இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைகளுக்கு இடையே மத்தியஸ்தம் பேச தயாராக இருப்பதாக ட்ரம்ப் முன்னரே கூறி இருந்ததும் அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

**-பவித்ரா குமரேசன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel