}மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும்: சிதம்பரம்

Published On:

| By Balaji

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் இன்று (செப்டம்பர் 26) 87ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறார். 2004-2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், தலைமை பொருளாதார ஆலோசகர், திட்டக் கமிஷன் துணைத் தலைவர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில், “நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாழ்த்துச் செய்தியில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். 100 ஆண்டுகள் கடந்தும் அவர் நலமுடன் வாழ வேண்டும். பொருளாதார சரிவை சரிசெய்ய மன்மோகன் சிங்கின் ஆலோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவிலிருந்து நாட்டை வெளியே கொண்டுவரும் வழியை மன்மோகன் சிங்கால் மட்டுமே காட்ட முடியும்” என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

“நாடாளுமன்றம் மற்றும் அரசியலில் மன்மோகன் சிங்கின் தலைமையில் நாடு பலன் பெற வேண்டும். இன்னும் பல ஆண்டுகள் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share