கிச்சன் கீர்த்தனா: சிக்கன்-வால்நட் (அக்ரூட்) ஸ்பைஸி கிரேவி

Published On:

| By Balaji

சிக்கன் என்றாலே 65, வறுவல், குழம்பு, பிரியாணி என ஒரே மாதிரி சாப்பிட்டு சாப்பிட்டு போரடிச்சிடுச்சு… வாழ்க்கையில ஒரு மாறுதல் வேணாமா… என அலுத்துக்கொள்கிறவர்கள் இந்த சிக்கன் வால்நட் (அக்ரூட்) ஸ்பைஸி கிரேவியை முயற்சி செய்து பாருங்கள்.

**என்ன தேவை?**

எலும்பில்லாத சிக்கன் – 350 கிராம்

பச்சைமிளகாய் – 2

பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் – ஒன்று

இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

பாலக்கீரை விழுது – ஒரு கப்

வால்நட் – அரை கப்

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

சிக்கனை நறுக்கி சுத்தம் செய்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வால்நட் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, பாலக்கீரை விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும். இத்துடன் அரைத்த வால்நட் விழுது சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கிரேவி பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கவும். சூடான சாதம், ரொட்டி, ஃபுல்காவுடன் சிக்கன்-வால்நட் ஸ்பைஸி கிரேவியைப் பரிமாறவும்.

**[சண்டே ஸ்பெஷல்: சளித் தொந்தரவுக்கு எளிய தீர்வுகள்](https://minnambalam.com/public/2022/01/23/1/easy-remedy-for-cold)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share