கோடை வந்தாலே காய்கறிக் கூடையில் எலுமிச்சையும் இடம்பிடிக்கும். எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்தாலும் எலுமிச்சைப்பழம் செய்யக்கூடிய உணவு மற்றும் பான வகைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அவற்றில் ஒன்று இந்த லெமன் ரோஸ்ட் சிக்கன். அசைவப்பிரியர்களுக்காக சிக்கனோடும் கைகோக்கும் விதமாக அமையும் இந்த லெமன் ரோஸ்ட் சிக்கனை நீங்களும் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
தோலுடன் கூடிய சிக்கன் துண்டுகள் – 8
எலுமிச்சை – 3 (பெரியது)
மிளகு – ஒரு டீஸ்பூன்
இத்தாலியன் சீஸனிங் – ஒரு டேபிள்ஸ்பூன் (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 4 பற்கள்
எண்ணெய் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிக்கனை நான்கு தொடைக்கறி, நான்கு லெக் பீஸ் என்கிற எண்ணிக்கையில் சுமார் ஒரு கிலோ அளவுக்கு வாங்கிக்கொள்ளுங்கள். சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்யவும். இரண்டு எலுமிச்சையிலிருந்து அதன் மேல் தோலை மட்டும் கவனமாகத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
இதற்கு லெமன் ஜெஸ்ட் (LEMON ZEST) என்று பெயர். இதைத்தவிர அந்த இரண்டு பழங்களிலிருந்தும் சாறு எடுத்துக் கொள்ளவும்.
மூன்றாவது எலுமிச்சையைத் துண்டுகளாக நறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு, எண்ணெய், இத்தாலியன் சீஸனிங், எலுமிச்சைச்சாறு, லெமன் ஜெஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
சிக்கன் துண்டுகள்மீது இந்த கலவையை பூசி அரைமணி நேரம் ஊறவிடவும். ஒரு நான்-ஸ்டிக் ஃப்ரையிங் பானில் சிக்கன் துண்டுகளை அடுக்கி இடையிடையே நறுக்கி வைத்த எலுமிச்சை வில்லைகளை வைக்கவும். மிதமான தீயில் சிக்கன் வேகும் வரையில் இருபுறமும் புரட்டி ரோஸ்ட் செய்யவும்.
சண்டே ஸ்பெஷல் – தூக்கத்துக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டா?
.