சென்னை: இடி மின்னலுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு!

Published On:

| By Balaji

தென்தமிழகக் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மயிலாடுதுறை, கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

அதேபோல தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியின் சில பகுதிகளிலும் இடி மின்னலுடன்கூடிய கனமழைக்கும், உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பிருக்கிறது.

இன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழைக்கும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share