பெட்ரோல், டீசல் விலை 34 நாட்களுக்குப் பின் மீண்டும் உயர்வு

Published On:

| By Balaji

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 34 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினந்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன.

சமீப நாட்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் சாலை போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளது. பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களை பயன்படுத்தும் வழக்கத்துக்கு வந்தனர். இந்தச் சூழலில் சென்னையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 34 நாட்களுக்கு பின்னர் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 53 காசுகள் விலை உயர்ந்து ரூ.75.54க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 52 காசுகள் விலை உயர்ந்து ரூ.68.22க்கு விற்பனையாகிறது.

**ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share