Aரிலாக்ஸ் டைம்: சீஸ் சூப்!
கொரோனா பரவலுக்கு மத்தியில், வெளியிடங்களில் சாப்பிட முடியாத நிலையில், மதிய உணவு இடைவெளிக்கு முன் பசியெடுக்கும் நேரத்தில் ஏதோ ஒரு திரவ உணவை அருந்துவதைவிட சத்துகள் நிறைந்த, எளிதாகச் செய்யக்கூடிய இந்த சீஸ் சூப் செய்து அருந்தலாம்.
**எப்படிச் செய்வது?**
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயைப் போட்டு, நறுக்கிய வெங்காயம் ஒன்று, நறுக்கிய குடமிளகாய் பாதி அளவு, நறுக்கிய வெள்ளரிக்காய் ஒன்று சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு. இரண்டு கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய நீர், அரை கப் பால், ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவைச் சேர்த்து கொதிக்கவிடவும். அத்துடன் மூன்று க்யூப் துருவிய சீஸையும் இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூளையும் சேர்த்து ஒரு கொதிவந்ததும் இறக்கி, சிறிதளவு மல்லித்தழை தூவி பரிமாறவும்.
**சிறப்பு**
கலோரியும் புரதமும் நிறைந்த சூப் இது. கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி12 ஆகியவை நிறைந்துள்ளன. சருமத்தைப் பொலிவாக்கும். முதுமையான தோற்றத்தைப் போக்கும். கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும்.�,