Aரிலாக்ஸ் டைம்: சீஸ் அவல்!

Published On:

| By Balaji

ஒரே நேரத்தில் அதிக அளவு உணவு அல்லது சத்தற்ற உணவைச் சாப்பிடுவதை விட பழங்கள், சுண்டல் போன்றவற்றை ஸ்நாக்ஸ் முறையில் சாப்பிடலாம். அதற்கு இந்த சீஸ் அவல் உதவும். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

**எப்படிச் செய்வது?**

வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடாக்கி, 200 கிராம் அவலைப் போட்டு பொரித்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், 2 டேபிள்ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து 50 கிராம் சீஸைத் துருவிக் கலந்து பரிமாறவும்.

**சிறப்பு**

சீஸ் பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பசிக்கிறது என்று நச்சரிக்கும் குழந்தைகளுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த சீஸ் அவல்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share