தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றமுடியாது: நீதிபதிகள் குழு!

Published On:

| By Balaji

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றம் என்ற பெயரை ’தமிழ்நாடு உயா் நீதிமன்றம்’ என பெயா் மாற்றம் செய்ய முடிவு செய்து மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கருத்தைக் கேட்டது. இதுதொடா்பாக அண்மையில் நடைபெற்ற அனைத்து நீதிபதிகள் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போன்று சார்ட்டர்டு நீதிமன்றங்களான மும்பை உயர் நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படவில்லை என்பதாலும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்துடன் புதுச்சேரி மாநிலமும் உள்ளதால் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது முறையாக இருக்காது என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்ற முடியாது. தற்போது உள்ள பெயரே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில், ஊழல் மற்றும் திறமையின்மைக் காரணமாக 3 நீதிபதிகளை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட முன்னாள் கூடுதல் நீதிபதிக்கு எதிரான ஊழல் வழக்கைத் தொடர்ந்து நடத்தவும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர திறமையின்மை காரணமாக எட்டு கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பும் மறுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் சில முக்கிய நடவடிக்கைகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share