சந்திரயான் -2 ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அனைத்து சோதனைகளையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் இன்று தெரிவித்துள்ளார்.
நிலாவை ஆராய்வதற்காக இஸ்ரோஅனுப்பிய சந்திராயன் – 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதில் இறுதி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டாலும், திட்டமிட்டபடி ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவை சுற்றி வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், “சந்திராயன் – 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருகின்றது. அடுத்தகட்டமாக, அதிலுள்ள அனைத்து கருவிகளையும் இயங்க வைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தின் போது லேண்டர் விக்ரமுடன் தொடர்பு இழந்ததற்கு சாத்தியமான காரணங்களை தேசிய அளவிலான குழு ஆராய்கிறது. ஆர்பிட்டர் எட்டு பேலோடுகள் மற்றும் விஞ்ஞான கருவிகளைக் கொண்டு செல்கிறது. இது சோதனைகளை மேற்கொள்ளும். சந்திரயான் -2 என்பது சந்திரனுக்கான இந்தியாவின் இரண்டாவது பணி” எனத் தெரிவித்துள்ளார்.
�,