Jகல்லூரிகளுக்கு விடுமுறையா?

Published On:

| By Balaji

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தஞ்சை உட்பட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கல்லூரிகளில் நடைபெறும் நேரடி வகுப்புகளை ரத்து செய்யலாமா என உயர் கல்வித்துறையிடம் சுகாதாரத்துறை அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

**சத்தீஷ்கர்**

சத்தீஷ்கர் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் உடனடியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களை நாளை முதல் உடனடியாக மூட சத்தீஷ்கர் முதல்வர் ரவீந்திர சௌபாய் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி,கல்லூரிகள் மூடப்படுவதாகவும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**பஞ்சாப்**

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்றும் அதுவரை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share