சென்னை: எந்தெந்த இடங்களில் பேருந்துகள் இயக்கம்?

Published On:

| By Balaji

அத்தியாவசிய பணிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்காகச் சென்னையில் இன்று 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ள மாநகர போக்குவரத்துக் கழகம் எந்தெந்த வழிகளில் இயக்கப்படும் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு நான்காம் கட்டமாக நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் சுழற்சி முறையில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது போக்குவரத்துக்கான தடை இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை. எனவே பணிக்கு செல்லும் ஊழியர்களுக்காக மட்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அளவுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கட்டணத்தைப் பயணிகளே ஏற்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**எந்தெந்த இடங்களில் இயக்கப்படுகின்றன**

சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளான திருவான்மியூர்‌ பேருந்து நிலையம்‌, கொட்டிவாக்கம்‌, ஒக்கியம்‌ தொரப்பாக்கம்‌ தலைமைச்‌ செயலகக்‌ காலனி, பீட்டர்ஸ்‌ காலனி, கிண்டி, கீழ்க்கட்டளை, நங்கநல்லூர்‌, கே.கே.நகர்‌, மறைமலை நகர்‌, கூடுவாஞ்சேரி, தாம்பரம்‌, தாம்பரம்‌ கிழக்கு, மாடம்பாக்கம்‌, பூவிருந்தவல்லி, அய்யப்பந்தாங்கல்‌, வடபழனி, அண்ணா நகர்‌ மேற்கு பணிமனை, ஜெ.ஜெ.நகர்‌ மேற்கு, திருமங்கலம்‌ அரசு அலுவலர்‌ குடியிருப்பு, செவ்வாப்பேட்டை, திருநின்றவூர்‌, ஆவடி, பெரியார்‌ நகர்‌, பெரம்பூர்‌ பேருந்து நிலையம்‌, சூரப்பேட்டை, பாடியநல்லூர்‌, மாதவரம்‌ ஆசிஸ்‌ நகர்‌, கவிஞர்‌ கண்ணதாசன்‌ நகர்‌, மீஞ்சூர்‌, மாத்தூர்‌ எம்‌.எம்‌.டி.ஏ., சிங்கப்பெருமாள்கோயில்‌, மணலி, எண்ணூர்‌, நெற்குன்றம்‌, தேனாம்பேட்டை மற்றும்‌ துரைப்பாக்கம்‌ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகள்‌ கட்டண அடிப்படையில்‌ இயக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share