Uசிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணையை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (மே 18) வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக வடக்கு டெல்லி பகுதிகளில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பாடங்களுக்கான ஒரு சில தேர்வுகள் நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அட்டவணை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

கடந்த மே 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்திருந்தது.​ஆனால், சிபிஎஸ்இ இணையதளத்தில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சில தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துவதால் அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.

**12ஆம் வகுப்பு பாடங்களுக்கான தேர்வு அட்டவணை**

இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதில், “வரும் ஜூலை 1 தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

**விடுபட்ட 10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை**

மேலும், “காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும். தேர்வர்கள் சானிடைசர்கள் கொண்டு வர வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share