yகிச்சன் கீர்த்தனா: முந்திரி – கருப்பட்டி கோவா

Published On:

| By Balaji

�கொரோனா பரவல் குறைந்து தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி, கண்களையும் மனதையும் ஒருசேர உற்சாகத் துள்ளலில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்த ஆனந்த பரவசத்தை முழுமையாக்க உங்கள் வீட்டிலேயே மிகச் சுலபமாகவும், விரைவாகவும் செய்து பரிமாற இந்த முந்திரி – கருப்பட்டி கோவா உதவும்.

**என்ன தேவை?**

முந்திரிப்பருப்பு – முக்கால் கப்

உடைத்த / சீவிய கருப்பட்டி – முக்கால் கப்

பால் – ஒன்றேகால் கப்

சர்க்கரை சேர்க்காத கோவா – 100 கிராம்

நெய் – அரை கப்புக்கும் குறைவாக

**எப்படிச் செய்வது?**

முந்திரியை நன்கு உலரவைத்து சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும், அதிலேயே கருப்பட்டி, மீதி பால் கலந்து அரைத்தெடுக்கவும். இதை அடிகனமான வாணலியில் ஊற்றவும். மிதமான தீயில் கிளறவும். பாதி அளவு வெந்தபிறகு உதிர்த்த கோவா சேர்க்கவும். நன்கு பளபளவென வந்த பிறகு பாதி அளவு நெய் சேர்க்கவும். நுரைத்து வரும்போது இறக்கி வைத்து மீதி நெய் சேர்த்து சிறிது நேரம் நன்கு கலந்து விடவும். நெய் தடவிய பெரிய தட்டில் இதைக் கொட்டி சில நிமிடங்கள் கழித்து விருப்பமான வடிவத்தில் வில்லைகள் போடவும்.

**[நேற்றைய ரெசிப்பி: மாப்பிள்ளை சம்பா தேங்காய்ப்பால் அல்வா](https://minnambalam.com/public/2021/10/26/1/coconut-milk-halva)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share