ந்த ஆண்டு அக்னி நட்சத்திர நாட்களில் மழையின் தாக்கத்தால் வெயிலின் தாக்கம் சற்றுக் குறைந்து இப்போது அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த வார வீக் எண்டில் இந்த ஹெல்த்தியான கேரட் சீஸ் சாண்ட்விச் செய்து இந்த விடுமுறை நாளை கொண்டாடலாம்.
என்ன தேவை?
பிரெட் ஸ்லைஸ் – 10
துருவிய கேரட், துருவிய கோஸ் துருவிய சீஸ் – தலா அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – அரை டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பிரெட் மற்றும் வெண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பிரெட் ஸ்லைஸ் மேல் வெண்ணெய் தடவி, அதன் மேல் கேரட் கலவையைப் பரப்பி, மற்றொரு பிரெட் ஸ்லைஸ் கொண்டு மூடவும். இதைத் தக்காளி சாஸுடன் அப்படியே பரிமாறலாம் அல்லது டோஸ்ட் செய்தும் பரிமாறலாம்.
.