�
இன்று தெருவோரக் கடைகளின் பிரதான உணவாக மாறியிருக்கிறது சூப். காபி, டீயைத் தவிர்க்க நினைக்கிற பலரின் சாய்ஸும் இந்த சூப் வகைகளே. அப்படிப்பட்ட சூப்பை வீட்டிலேயே செய்து சாப்பிட்டு, உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.
**எப்படிச் செய்வது?**
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடானதும் சிறிதளவு பிரெட் துண்டுகளைப் போட்டு வறுத்துத் தனியே வைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, பொடியாக நறுக்கிய ஒரு கப் முட்டைகோஸை வதக்கி தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய நீரில், அரை கப் பால், இரண்டு டீஸ்பூன் சோளமாவு கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும், இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டீஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவும். பரிமாறும் முன் பிரெட் துண்டுகளைச் சேர்க்கவும்.
**சிறப்பு**
வைட்டமின் கே நிறைந்தது. அல்சைமர் எனும் மறதிநோயைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், மார்பகம், குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பாதுகாக்கும்.
�,