�
பசி எடுக்கத் தொடங்கி விட்டது… அவசரமாக சாப்பிட வேண்டும், செய்வதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், ரிலாக்ஸ் டைமில் இந்த முட்டைகோஸ் பக்கோடா செய்து அசத்தலாம்.
**எப்படிச் செய்வது?**
இரண்டு பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். அதோடு நீளமாக நறுக்கிய ஒரு கப் முட்டைகோஸ், சிறிது உப்பு போட்டு பிசைந்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து அதில் ஒரு கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், நீளமாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை ஓமம், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, சூடான எண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவாக பிசையவும். வெங்காயம், முட்டைகோஸ் கலவையில், ஈரப்பதம் இல்லை என்றால், சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சிறிது சிறிதாக கிள்ளி போட்டு, மிதமான தீயில், பொன் நிறமாகப் பொரித்தெடுக்கவும்.
**சிறப்பு**
முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. வயிற்று புண் உள்ளவர்களுக்கும் ஏற்றது.�,