�ஜல்லிக்கட்டு பிரச்னையில் முதலில் யார் பேசுவது என்ற தயக்கத்தில் ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என அனைவரும் பின்தங்கி நின்றபோது முதலில் வெளிவந்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவரது தயாரிப்பில் உருவாகிவரும் 4G திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை காயத்ரி சுரேஷ், சதீஷ், கே.பாக்யராஜ் ஆகிய அனைவரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களாக இருந்ததால், முதல் குரலாக நம் குரலைப் பதிவு செய்யுங்கள் என ஷூட்டிங்கின்போதும் அவர்களை மீடியாவுக்கு பேட்டிகொடுக்கவைத்தார். ஆனால், மீடியா அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
[மின்னம்பலத்தில் ஜி.வி.பிரகாஷ் பேட்டி](https://minnambalam.com/k/1484332220)
காளைகளுக்காக மட்டும் தங்களது ஆதரவைத் தருவதோடு நிறுத்திவிடாமல், காளைகளை வளர்த்தெடுக்கும் விவசாயிகளுக்குமாக தனது போராட்டத்தை சி.வி.குமார் நீட்டித்திருக்கிறார்.
**விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்றிலிருந்து பெப்ஸி, கோக் போன்ற தயாரிப்புகளை நான் பயன்படுத்தப் போவதில்லை. நான் மட்டுமல்ல, இனி எங்கள் புரொடக்ஷனில் உருவாகும் எந்தப் படத்திலும் இவற்றைப் பயன்படுத்தமாட்டோம்** என்று அவரது ஃபேஸ்புக் வலைதளத்தில் அறிவித்திருக்கிறார்.
�,”