அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட தந்தைக்கும் எப்போதும் போனில் மூழ்கி பிஸியாக இருக்கும் மகனுக்கும் இடையேயான உறவினூடாக வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை, இழந்துகொண்டிருக்கும் அன்பை, உறவின் அருமையைச் சித்திரித்திருக்கிறது 60 வயது மாநிறம் திரைப்படம்.
வயதான காலத்தில் சிவாவின் (விக்ரம் பிரபு) அப்பா (பிரகாஷ் ராஜ்) ஞாபகமறதி நோயால் பாதிக்கப்படுகிறார். வேறோர் ஊரில் வேலைக்குச் செல்லும் காரணத்தினால் சிவா தனது அப்பாவை ஒரு மருத்துவக் காப்பகத்தில் விட்டுச் செல்கிறான். அங்கு மருத்துவராகப் பணிபுரியும் அர்ச்சனா (இந்துஜா) மற்ற நோயாளிகளோடு இவரையும் பார்த்து கொள்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வந்து அப்பாவைப் பார்க்கும்போது நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அப்பாவைக் கடைக்கு அழைத்துச் சென்று மீண்டும் காப்பகத்தில் விடும் நேரத்தில் அவசர அவசரமாக வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், கேட்டிலேயே விட்டுச் சென்றுவிடுகிறான் சிவா. விட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே காணாமல் போய்விடும் அப்பா, கொலை செய்து பிணத்தோடு சென்று கொண்டிருக்கும் அடியாள் ரங்கா (சமுத்திரக்கனி) வண்டியில் எதேச்சையாக ஏறிக்கொள்கிறார். அந்த வண்டிக்கு விபத்து ஏற்பட, காப்பாற்ற வரும் குமரவேலும் அடியாளோடு மாட்டிக் கொள்கிறார். மற்றொருபக்கம் சிவா, அர்ச்சனா அப்பாவைத் தேடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஒருபக்கம் ரங்காவிடம் மாட்டிக் கொண்டிருக்கும் குமரவேல் குடும்பம், அப்பா என்ன ஆனார்கள், சிவா அப்பாவைக் கண்டுபிடித்தானா என்ற கேள்விகளுக்கு பல திருப்பங்களோடு, உணர்வுபூர்வமான திரைக்கதையால் பதில் சொல்லப்படுகிறது.
மொழி, அபியும் நானும், பயணம் என வெற்றிப் படங்களை தந்த பிரகாஷ்ராஜ் – ராதாமோகன் கூட்டணியின் அடுத்த வித்தியாசமான படைப்புதான் இந்த 60 வயது மாநிறம். இங்கு யாரும் தனியாக இல்லை, ஒவ்வொருவருக்கும் யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை மனதுக்குள் மென்மையாகப் படரவிடும் இயக்குநர் ராதாமோகன் பாராட்டுக்குரியவர். அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் பொதுவாக வயதான காலத்தில்தான் வருகிறது. அதுவும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. சமகாலத்தில் வேலை பளு, மன அழுத்தம் காரணமாக வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதை மெல்லிய கோடாக கதையின் பின்னணியில் விளக்குகிறது.
ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவற்றை நையாண்டி செய்திருப்பது துணிவு. “ஆயிரம் அன்பை மனதில் வைத்துக்கொண்டு விரோதியாகப் பார்க்கும் உறவு அப்பா”, “ஆணும் பெண்ணும் எப்போது உண்மையாகப் பார்த்து கொள்கிறார்களோ அந்நேரம், ஒரு தலைமுறைக்கான விதையை இறைவன் போடுகிறான்” போன்ற வசனங்கள் அழுத்தமாக இருந்தாலும், உணர்வால் கடத்த வேண்டிய விஷயங்களை அதிகமாக வசனம் பேசி சிதைத்துள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
இதனோடு அப்பாவை பற்றி உணரும் நேரத்தில் மது அருந்துவது, காதல் காட்சிகள் தேவையா என்ற கேள்வி எழுகிறது. காவல் துறையைச் சித்திரித்த விதமும் க்ளிஷே. அன்பின் முக்கியத்துவத்தை வார்த்தைகளில் விவரித்துவிட்டு காட்சிகளில் கோட்டைவிட்டுவிட்டனர். ‘கோதி பன்ன சாதாரண மைக்கட்டு’ என்ற கன்னட படத்தின் ரீமேக்கான இந்தப் படம், அதனோடு ஒப்பிடும்போது சற்று சறுக்கலாகவே இருக்கிறது.
பிரகாஷ் ராஜ் தனது காதல் கதை சொல்லும்போது ஃப்ளாஷ்பேக் எல்லாம் போகாமல் அந்த நினைவுகளை நம்மையும் அசைபோட வைத்த இடம் அப்ளாஸ். குமரவேல், சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் மூவரும் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள். விக்ரம் பிரபு, இந்துஜா இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். விக்ரம் பிரபுவின் முந்தையப் படங்களோடு ஒப்பிடும்போது பாஸ் மார்க் வாங்குகிறார். அருள்ஜோதி அவ்வப்போது வந்து பாஸாக மிரட்டிச் செல்கிறார். மதுமிதா அடக்கி வாசித்திருக்கிறார்.
ஏனோ தெரியவில்லை இளையராஜாதான் இந்தப் படத்துக்கு இசை என்பதை நம்ப முடியவில்லை. ஒரே இரைச்சல். ஒரு சில இடங்களில் உணர்ச்சியில் நம்மைக் கட்டி போட்டாலும், ஒரு சில இடங்களில் ஐயா போதும் என்ற அளவுக்கு வாசித்திருக்கிறார். நடிகர்களின் உணர்ச்சிகளை க்ளோஸ்அப்பில் காட்ட வேண்டும் என்ற ஒளிப்பதிவாளரின் முயற்சியில் பிரகாஷ் ராஜ் மட்டும் ஜெயிக்கிறார்.
யாரும் யாருக்கும் நேரம் ஒதுக்காமல் எதை எதையோ தேடி ஓடி அலைந்து கொண்டிருக்கும் சமகாலத்தின் முக்கிய பிரச்சினையைக் கையில் எடுத்த இயக்குநர், அதில் மட்டுமே முழு கவனம் செலுத்தியிருந்தால் தமிழின் முக்கிய படங்களில் ஒன்றாக மாறியிருக்கும். இருந்தாலும் இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான ஒரு பாடமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**
**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**
**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**
**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**
�,”