Cவிடைபெற்றார் அத்திவரதர்

public

தெய்வமாக குளத்திலிருந்து எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் கொஞ்ச நாட்களிலேயே ஊடக உலகின் தவிர்க்க முடியாத செய்தி நாயகனாக மாறி, அவ்வப்போது சர்ச்சைகளுக்கும் மையமாக இருந்து, 48ஆம் நாள் முடிவில் நேற்று (ஆகஸ்ட் 17) இரவு மீண்டும் அனந்த சரஸ் குளத்துக்குள் உள்ள நிலவறைக்குள் சென்றுவிட்டார்.

நேற்று மாலையே அத்திவரதர் – காஞ்சி வரதர் எதிர்சேவை எனப்படும் நிகழ்ச்சி நடந்தது. அதாவது அத்திவரதர், உற்சவப் பெருமாளிடம் விடைபெற்றுக் கொள்ளும் காட்சிதான் அது. அதைப் பார்த்த பலரும் தங்களையும் அறியாமல் கண்ணீர் சிந்தினர். இந்த நிலையில் அத்திவரதர் சிலையை அடுத்து வரும் 40 ஆண்டுகளுக்குப் பத்திரப்படுத்தும் வகையில் பச்சை கற்பூரம், சாம்பிராணி உள்ளிட்ட பாரம்பரிய தைலம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதன்பின் நேற்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு மேல் பூஜைகள் நடந்து முடிந்து அத்திவரதர் அனந்த சரஸ் குளத்துக்குள் அனந்த சயன நிலையில், அதாவது மீண்டும் கிடந்த கோலத்தில் உள்ளே வைக்கப்பட்டார். அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள நீராழி மண்டபம் என்ற அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டது. அதன் பிறகு குளத்தில் நீர் நிரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது மிக மிக குறிப்பிட்ட சிலரே அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் அத்திவரதருக்குக் கண்ணீர் மல்க விடையளித்தனர். சமூக வலைதளங்களிலும் பலர் அத்திவரதரை மிஸ்யூ என்று குறிப்பிட்டு விடை கொடுத்தனர். இனி 2059ஆம் ஆண்டுதான் அத்திவரதர் வெளியே வருவார்.

**

மேலும் படிக்க

**

**[மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!](https://minnambalam.com/k/2019/08/17/18)**

**[உடலுறவு இல்லாமல் “உறவு” சாத்தியமில்லையா?](https://minnambalam.com/k/2019/08/17/11)**

**[டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களை மிஞ்சும் கலெக்டர்கள்!](https://minnambalam.com/k/2019/08/17/67)**

**[அத்திவரதரை தினமும் தரிசித்த ஒரே ஒருவர்!](https://minnambalam.com/k/2019/08/17/20)**

**[திமுக சரவணனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: பாஜக](https://minnambalam.com/k/2019/08/17/61)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *